முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது அதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டு அதன் மீதான விசாரணை தீவிரபடுத்தபட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதுவரை விசாரணை ஆணையம் முன்பு தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவ கல்வி இயக்குனராக இருந்த விமலா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, சென்னை மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை பேரா சிரியை கலா, மருந்தியல் துறை உதவி பேராசிரியர் முத்துச்செல்வன், அரசு மருத்துவர் பாலாஜி, அக்கு பஞ்சர் டாக்டர் சங்கர் ஆகியோர் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி தீபக் இன்று விசாரணை ஆணையத்தின் முன் ஆஜர் ஆனார். அவரிடம் தொடர்ந்து 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. தீபக் கொடுத்த தகவல்களை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர்.
விசாரணைக்கு பிறகு தீபக் அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்த சந்தேகங்களை விசாரணை ஆணையத்திடம் தெரிவித்துள்ளேன். மேலும், சந்தேகம் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.’ என்று கூறினார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…