ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை : பகீர் தகவல்

Default Image

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா தனது அம்மா எனவும் அதலால் அவர்கள் உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனை செய்யவேண்டும் எனவும் அம்ருதா என்ற பெண்மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின் அந்த வழக்கை பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு பெண்குழந்தை பிறந்தது உண்மைதான் என அவரது அத்தை மகளான லலிதா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள லலிதா தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘ஜெ எனது அம்மாவின் அண்ணன் மகள். ஜெ-வுக்கும் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது அதலால் ஜெக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்ததபோது எங்கள் பெரியம்மா தான் உதவியாக இருந்தார். இதனை வெளியே சொல்ல கூடாது என சத்தியம் வாங்கிகொண்டார்.

1970 க்கு பிறகு எங்கள் குடும்பத்துக்கும் ஜெயலலிதாவிற்கும் தொடர்பில்லாமல் இருந்தது. பிறகு பிரசவ நேரத்தில் தான் எனது பெரியம்மாவை உதவிக்கு அழைத்தார். அந்த குழந்தை அம்ருதாவாக இருக்கலாம்.

சைலஜா, ஜெயலலிதாவிற்கு சகோதரி முறை. சைலஜா தான் அம்ருதாவை வளர்த்தார் என்றால், ஒருவேளை ஜெயலலிதாவின் மகளாக அம்ருதா இருக்கலாம். டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் உறுதியாக தெரியும். மேலும்               3 மாதங்களாக தான் அம்ருதாவை தெரியும் அவர் ஐயங்கார் என்பதால் அந்த முறைப்படி தகனம் செய்ய ஜெயலலிதாவின் உடலை கேட்கிறார். ஜெ சொத்துகளை அம்ருதா கேட்கவில்லை. இருப்பினும் டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்’ இவ்வாறு ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்