ஜெயலலிதாவுக்கு அல்வா?விசாரணை ஆணையத்தில் திடுக் தகவலை வெளியிட்ட செவிலியர்
விசாரணை ஆணையத்தில் ஆஜரான செவிலியர் ரேணுகா ,அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது, வீட்டில் தயாரிக்கப்பட்ட பாதம் அல்வா, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதை மறுக்கவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.
மருத்துவர் அர்ச்சனா ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து வந்தவர். அண்மையில் வெளியான ஜெயலலிதாவின் அப்பலோ ஆடியோவில் மருத்துவர் அர்ச்சனாவின் குரல் இடம்பெற்று இருந்தது.
கடந்த 2ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன், மருத்துவர் அர்ச்சனா மற்றும் செவிலியர் ரேணுகா ஆகியோர் ஆஜராகினர். 3 மணி நேர விசாரணைக்கு பின் வெளியில் வந்த அர்ச்சனா, அப்போலோவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ விளக்கத்தை அளித்தாக செய்தியாளர்களிடம் கூறினார்.
அப்போலோ மருத்துவர் அர்ச்சனாவைத் தொடர்ந்து, அதே மருத்துவமனையின் மூத்த செவிலியர் ரேணுகா, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நடைபெற்ற விசாரணை தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூட்ரீசீயன் அறிவுரைபடியே ஜெயலலிதாவுக்கு உணவு வழங்கப்பட்டதாக செவிலியர் ரேணுகா கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டு, நவம்பர் 27ஆம் தேதி வீட்டில் தயாரிக்கப்பட்ட பாதாம் அல்வா ஜெயலலிதாவிக்கு வழங்கப்பட்டு உள்ளதே என அப்பல்லோ அளித்த உணவு பட்டியலை காட்டி ஆணையம் தரப்பில் கேட்டவுடன், அதற்கு செவிலியர் ரேணுகா மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன், சிகிச்சையின்போது ஜெயலலிதாவை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்ததை, தான் பார்த்ததாக, விசாரணை ஆணையத்தில், மருத்துவர் அர்ச்சனா தெரிவித்திருப்பதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.