சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் ,ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆடியோ வெளியானதால் தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு நபர்களை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துத் துறை ஆணையர் ராமலிங்கம், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆகிய 4 பேர் இன்று ஆஜராகினர். ஆணையம் விசாரித்த சாட்சியங்களை சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்குவிசாரணை செய்து வரும் நிலையில், ராமலிங்கம், தீபக், பூங்குன்றனிடம் குறுக்குவிசாரணை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஜெயலலிதாவை சசிகலா மிகவும் பிரியமாக பார்த்துக் கொண்டார் என்பதை தீபக் உறுதிசெய்ததாகக் கூறினார். ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது தொடர்பாக தமக்கு எவ்வித ஐயமும் இல்லை என தீபக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆடியோ வெளியானதால் தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…