அம்மாவுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் ஜெயக்குமாரிடமா முதல்வர் பொறுப்பை கொடுத்தார்கள்.? அம்மா இருக்கும் போது 3 முறை முதல்வராக பொறுப்பில் இருந்தவர் யார் என மக்களுக்கு தெரியும். – தேனி எம்பி ராவீந்திரநாத் பேட்டி.
தேனி மாவட்ட எம்பியும், ஓ.பன்னேர்செல்வம் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். அவர் கூறுகையில், நான் தேனி தொகுதி ரயில்வே கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன்வைத்தேன். அதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அரசு பதில் அப்பியுள்ளது . என கூறினார்.
அதிமுக எம்பி :
அடுத்ததாக, கடந்த 2019 தேர்தலில், தமிழகம் முழுவதும் போட்டியிட்ட அதிமுகவுக்கு வெற்றியை தேடி தந்தேன். இரட்டை இலையில் போட்டியிட்ட நான் மட்டுமே வென்றேன் என குறிப்பிட்டார். மேலும் , அரசியல் ரீதியாக பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் இருக்கும். இறுதி முடிவை தலைமை தான் முடிவு செய்யும். என குறிப்பிட்டார்.
ஆன்லைன் சூதாட்டம் :
ஆன்லைன் சூதாட்ட தடை பற்றி கேட்டபோது, சட்டசபை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை. அங்கு மசோதா நிறைவேற்றப்பட்டால், அது மக்களுக்கு பாதகமில்லாமல் இருந்தால் ஆளுநர் அதனை நிறைவேற்ற வேண்டும் என தனது கருத்தை தெரிவித்தார்.
முதல்வர் பொறுப்பு :
மேலும், அனைவரும் ஒன்றாக இருந்தால் தான் நல்லது. என இபிஎஸ் – ஓபிஎஸ் இணைப்பு பற்றி பேசினார். அடுத்து ஓபிஎஸ் தரப்பை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்க முடியாது என கூறுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அம்மாவுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் ஜெயக்குமாரிடமா முதல்வர் பொறுப்பை கொடுத்தார்கள்.? அம்மா இருக்கும் போது 3 முறை முதல்வராக பொறுப்பில் இருந்தவர். அந்தளவுக்கு அம்மாவின் நம்பிக்கையை பெற்றவர் ஓபிஎஸ். விரைவில் காலம் வரும் போது அது வெளிப்படும். என தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…