ஜெயகுமாரிடமா முதலமைச்சர் பதவியை கொடுத்தாங்க.? தேனி எம்பி ரவீந்திரநாத் கடும் விமர்சனம்.! 

Default Image

அம்மாவுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் ஜெயக்குமாரிடமா முதல்வர் பொறுப்பை கொடுத்தார்கள்.? அம்மா இருக்கும் போது 3 முறை முதல்வராக பொறுப்பில் இருந்தவர் யார் என மக்களுக்கு தெரியும். – தேனி எம்பி ராவீந்திரநாத் பேட்டி.

தேனி மாவட்ட எம்பியும், ஓ.பன்னேர்செல்வம் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். அவர் கூறுகையில், நான் தேனி தொகுதி ரயில்வே கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன்வைத்தேன். அதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அரசு பதில் அப்பியுள்ளது . என கூறினார்.

அதிமுக எம்பி :

அடுத்ததாக, கடந்த 2019 தேர்தலில், தமிழகம் முழுவதும் போட்டியிட்ட அதிமுகவுக்கு வெற்றியை தேடி தந்தேன். இரட்டை இலையில் போட்டியிட்ட நான் மட்டுமே வென்றேன் என குறிப்பிட்டார். மேலும் , அரசியல் ரீதியாக பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் இருக்கும். இறுதி முடிவை தலைமை தான் முடிவு செய்யும். என குறிப்பிட்டார்.

ஆன்லைன் சூதாட்டம் : 

ஆன்லைன் சூதாட்ட தடை பற்றி கேட்டபோது, சட்டசபை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை. அங்கு மசோதா நிறைவேற்றப்பட்டால், அது மக்களுக்கு பாதகமில்லாமல் இருந்தால் ஆளுநர் அதனை நிறைவேற்ற வேண்டும் என தனது கருத்தை தெரிவித்தார்.

முதல்வர் பொறுப்பு : 

மேலும், அனைவரும் ஒன்றாக இருந்தால் தான் நல்லது. என இபிஎஸ் – ஓபிஎஸ் இணைப்பு பற்றி பேசினார். அடுத்து ஓபிஎஸ் தரப்பை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்க முடியாது என கூறுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,  அம்மாவுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் ஜெயக்குமாரிடமா முதல்வர் பொறுப்பை கொடுத்தார்கள்.? அம்மா இருக்கும் போது 3 முறை முதல்வராக பொறுப்பில் இருந்தவர். அந்தளவுக்கு அம்மாவின் நம்பிக்கையை பெற்றவர் ஓபிஎஸ். விரைவில் காலம் வரும் போது அது வெளிப்படும். என தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்