ஜூன் 14-ஆம் தேதி பொறியியல் சான்றிதழ் சரிபார்ப்பு வரை நீட்டிப்பு!அண்ணா பல்கலைக்கழகம்

Default Image

அண்ணா பல்கலைக்கழகம்,பொறியியல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர முடியாத மாணவர்கள் வரும் 14-ஆம் தேதிக்கு முன் எப்போது வேண்டுமானாலும் உதவி மையத்துக்கு வரலாம் என்று  அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக, கடந்த மே 3 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரையிலான விண்ணப்ப காலத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஜூன் 5 ஆம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழகம் முழுவதும் 42 சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, கடந்த வெள்ளியன்று சான்றிதழ் சரிபாக்கும் பணி தொடங்கியது. ரேண்டம் எண் வழங்கப்பட்டபோதே, மாணவர்கள் விரும்பிய சேவை மையங்கள் ஒதுக்கப் பட்டன.

இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்காக குறிப்பிட்ட தேதியில் செல்ல முடியாதவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே சேவை மையத்தில் வரும் 14-ஆம் தேதிக்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வரலாம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒரே ஒரு முறைதான் அனுமதி என்பதால், உரிய சான்றிதழ்களின் அசலையும், நகலையும் தவறாமல் கொண்டு வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
fever (1)
edappadi palanisamy TVK VIJAY
Udhayanithi Stalin
Edappadi Palanisamy
Irfan - Youtuber
Annamalai (12) (1)