ஜூன் 1-ல் அனைத்துப் பள்ளிகளும் கட்டாயம் திறக்கப்படும்…! அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மே 2-ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும், ஜூன் 1-ம் தேதி அனைத்துப்பள்ளிகளும் திறக்கப்படும் என்று  தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளிப்போடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்,  ஜூன் 1-ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ”புதிய பாடத்திட்டம் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது.

கோடை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. காரணம் அவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க தயாராக வேண்டி உள்ளது.

மே 2-ம் தேதி முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும். விடுமுறை நீட்டிப்பு கிடையாது” என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital
Gold Price today