ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு இழப்பு ஏதும் இல்லை!அமைச்சர் ஜெயக்குமார்
ஒரு தேசம், ஒரு வரி என்ற அடிப்படையில் நாட்டை கட்டமைக்க அரசுகள் இணைந்து செயல்படுகின்றன என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜிஎஸ்டி முறையை தமிழகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 9 லட்சம் வணிகர்களுக்கு மேல் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர்.ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு இழப்பு ஏதும் இல்லை. சிறு வணிகர்களைப் பாதுகாக்க ஜிஎஸ்டியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.