ஜார்க்கண்ட் தேர்தல் ஹூரோவான ஹேமந்த் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- ஜார்கண்ட் மாநிலத்தின் ஹூரோவாகிய ஹேமந்த் சோரன்
- திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஹேமந்த் சோரன்க்கு வாழ்த்து.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்தநவம்பர் 30ந் தேதி முதல் டிசம்பர் 20ந் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தொடர்ந்து முன்னிலை வகித்தது.ஆளும் பாஜக பின் தங்கி இருந்து வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளே அதிக இடங்களை பிடித்து பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.இந்த கூட்டணி கட்சிகளை ஒருங்கினைத்த முக்தி மோர்ச்சா கட்சியின் செயலாளர் ஹேமந்த் சோரன் முதல்வராக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது அவர் அம்மாநிலத்தின் ஹீரோவாகி உள்ளார்.இந்நிலையில் அவருக்கு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தேர்தலில் வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன்க்கு திமுக தலைவரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் வாழ்த்துகள் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் மாநிலம் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.மேலும் ஹேமந்த் சோரன்க்கு பிரதமர் மோடியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.