ஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனுதாக்கல்!
மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி பகுதியில் கடந்த மே 3 ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், நடிகருமான மன்சூர் அலிகான், விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசினார்.
அப்போது, 8 வழிச்சாலை அமைப்பது குறித்து வன்முறையாகப் பேசி சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக மன்சூர் அலிகானை சென்னையில் நேற்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சேலம் கொண்டு வரப்பட்ட அவர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சேலம் ஓமலூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.