ஜாக்டோ ஜியோ போராட்டத்தைக் கைவிட்டு வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்..!
பொது மக்கள் நலன்கருதி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேரவையில் நேரமில்லா நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கமளித்துப் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய உயர்வால், அரசுக்கு ஒரே ஆண்டில் கூடுதலாக 14 ஆயிரத்து 719 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டதாக தெரிவித்தார். அரசின் மொத்த வரி வருவாயில் 70 சதவீதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகவே செலவிடப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆனால், மக்கள் நலத்திட்டங்களுக்கு 6 சதவீதம் மட்டுமே செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வரவிற்குள் செலவு இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்று, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.