ஜல்லிக்கட்டு2020 :பாதுகாப்பு வந்த காவல்துறையினரை கதிகலங்க வைத்த காளை..தெறித்து ஓடிய காவல்..வைரலாகும் வீடியோ உள்ளே

Default Image
  • தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி கோலகலமாக நடந்து வருகிறது.
  • பாதுகாப்பு வந்த காவல்துறையினரை காளை ஒன்று கதிகலங்க வைத்து மிரட்டியுள்ளது 

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.

உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலில் கோவில் காளைகள் விழ்த்துவிடப்பட்டன.இதே போல் நேற்று பாலமேடு நேற்று முன்தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைக்கட்டியது.அதே போல் இன்று உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.அவ்வாறு ஒருவர் பகிர்ந்த பகிர்வு அதிக கவனம் பெற்று வருகிறது.ஜல்லிக்கட்டு காளை ஒன்று வாடிவாசலில் இருந்து வெளியே வீரர்களை தன் காலால் எட்டி உதைத்து விட்டு ஒடி வருகிறது.திரும்பவும் பின்னோக்கி ஒடி பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினரை மிரட்டுகிறது.அங்கிருந்து அவர்கள் தப்பித்து  ஒடுகின்ற வீடியோ வெளியாகியுள்ளது.இதோ அந்த வீடியோ

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்