ஜப்பானில் தமிழகத்தில் பிடிக்கும் மீன்களை விற்க நடவடிக்கை எடுக்கப்படும்! மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

ஜப்பானில் தமிழகத்தில் பிடிக்கும் மீன்களை விற்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் நாட்டுடன் சூறை மீன்கள் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.  ஜப்பானில் டியூனா எனப்படும் சூறை மீன் பிரதான உணவாக இருப்பதால், தமிழகத்தில் பிடிக்கப்படும் சூறை மீன்களை அங்கே விற்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நம் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்