ஜனவரி 2ம் தேதி தஞ்சை வரும் ஆளுநர்-மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை பெறுகிறார்…!
ஜனவரி 2-ம் தேதி தஞ்சை சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை ஆளுநர் பெறுகிறார். ஜனவரி 1-ம் தேதி நடைபெறும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை தொடக்க விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்திருந்தார். இது குறித்து ஆளுநர் தன் வரம்பை மீறி செயல்படுவதாக கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தற்போது அவர் ஜனவரி 2ம் தேதி தஞ்சையில் தஞ்சை சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை ஆளுநர் பெறுகிறார். அரசியல் பிரமுகர்கள், பொதுநல அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் தொண்டு அமைப்பினரும் ஆளுநரிடம் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆளுநர் தஞ்சை வருவதை எதிர்க்கும் விதமாக ஜனவரி 1ம் தேதி கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.