ஜனவரி மாதம் 11 – 17 சாலை பாதுகாப்பு வாரமாக அரசால் கடைப்பிடிப்பு…!!
பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 11 – 17 சாலை பாதுகாப்பு வாரமாக அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் சாலை பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உருவாக்கும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செயல்முறை திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
விபத்து இல்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அவ்வப்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களின் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க கண்காணிப்பு நிழற்படக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.