ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது : மு.க.ஸ்டாலின்..!
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
மத்திய, மாநில அரசுகள் , தமிழகத்தின் அழிவிற்கு காரணமாக உள்ளதாகவும், அழிவை ஏற்படுத்திடும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தின் மீது திணிப்பதாகவும் கூறினார். நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் , பசுமை சாலை , காவிரி மேலாண்மை வாரியம் என பல கூட்டங்களை அடுக்காக அடுக்கினார் ஸ்டாலின்.
மேலும் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதாகவும் மத்திய, மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.