மேலும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கையில் வாளுடன் இருக்கும் ‘மஞ்சு’ சிலையும் கடத்தப்பட்டு அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த சிலை பிஹார் மாநிலம் புத்தகயா அருகே உள்ள கோயில் ஒன்றில் இருந்து திருடப்பட்டு பின் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுதுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.1 கோடியே 98 லட்சம் ஆகும்.
மீட்பு நடவடிக்கை..!!
இதனிடையே கடத்தப்பட்ட இந்த சிலைகள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் புகார் தெரிவித்திருந்த நிலையில் அதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன.இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள் இந்த சிலையின் உரிமையாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது பின் அந்த சிலைகளை அவர்களிடம் இருந்து மீட்டனர்.
மீட்கப்பட்டஇரண்டு சிலைகளையும் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர். அந்த சிலைகள் இரண்டும் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.கடத்தப்பட்டவர்களின் தகவல் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.தமிழனின் ஒவ்வொரு படைப்பையும் வெளிநாடுகளில் பணத்திற்காக விற்ப்பது வேதனையளிக்கிறது.
DINASUVADU