‘சோழர் கால சிலை’..!!அமெரிக்காவில் மீட்பு..!!கடத்தப்பட்டது எப்படி..?

Default Image

தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சோழர் காலத்துச் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப் படஉள்ளது.இதனை பிஹாரில் இருந்தும் கடத்தப்பட்ட சிலை ஒன்றும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது.

12-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த லிங்கோத்பவமூர்த்தி சிலை அமெரிக்காவில் அலபமாவில் உள்ள பிர்மிங்காம் அருங்காட்சியகத்தில் இருந்தது.மேலும் இந்த சிலை கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டதாகும். இந்த சிலையின் இந்திய ரூபாய் மதிப்பு மட்டும்ரூ.1 கோடியே 62 லட்சம்.

Image result for கொள்ளை

சிலை எப்படி கடத்தப்பட்டது..?

தமிழகத்தில் இருந்து 12-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த லிங்கோத்பவமூர்த்தி சிலை அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு, அங்கு பல பேரிடம் கைமாறி பின்பு அருங்காட்சியகத்திற்கு வந்து அங்கு இப்பொழுது வைக்கப்பட்டிருந்தது.

மேலும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கையில் வாளுடன் இருக்கும் ‘மஞ்சு’ சிலையும் கடத்தப்பட்டு அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த சிலை பிஹார் மாநிலம் புத்தகயா அருகே உள்ள கோயில் ஒன்றில் இருந்து திருடப்பட்டு பின் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுதுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.1 கோடியே 98 லட்சம் ஆகும்.

Related image

மீட்பு நடவடிக்கை..!!

இதனிடையே  கடத்தப்பட்ட இந்த சிலைகள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் புகார் தெரிவித்திருந்த நிலையில் அதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன.இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள் இந்த சிலையின் உரிமையாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது பின் அந்த சிலைகளை அவர்களிடம் இருந்து  மீட்டனர்.

மீட்கப்பட்டஇரண்டு சிலைகளையும் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர். அந்த சிலைகள் இரண்டும் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.கடத்தப்பட்டவர்களின் தகவல் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.தமிழனின் ஒவ்வொரு படைப்பையும் வெளிநாடுகளில் பணத்திற்காக விற்ப்பது வேதனையளிக்கிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்