சோம்நாத் சாட்டர்ஜி பொதுவாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடைபிடித்தவர் ! அன்புமணி ராமதாஸ்
சோம்நாத் சாட்டர்ஜி பொதுவாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடைபிடித்தவர் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் மக்களவை சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார்.இவருக்கு வயது 89 ஆகும்.இவர் சோம்நாத் சாட்டர்ஜி சிறந்த வழக்கறிஞர் ஆவார்.மேலும் கடந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த போது மக்களவையின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் இவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில் சோம்நாத் சாட்டர்ஜி பொதுவாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடைபிடித்தவர் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் சோம்நாத் மறைவு இடதுசாரி அரசியலுக்கும், நேர்மை அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU