காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்சமய நூல்களில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.இந்த கோவிலில் சிலை செய்வதில் முறைகேடு நடந்துள்ளது.இதற்கு அரசு அதிகாரியே துணை போயிருப்பது அவலத்தின் உச்சம்.
ஏகாம்பரநாதர் கோயில் பல்லவர் காலத்தில் சிறப்பு வாய்ந்தாக கருதப்படும் இந்தக்கோயில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட பிரசிதிபெற்ற கைலாசநாதர் கோயிலுக்குப் பின் எழுந்தது.இந்த கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையதாக கருதப்படுகின்றது.அத்தகைய பிரசிபெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை முறைக்கேடு நடந்துள்ளது.
காஞ்சிபுரம் புகழ்பெற்ற இந்த ஏகாம்பரநாதர் கோவில் சிலைகள் முறைகேடாக செய்யப்பட்டதாக புகார் எழுந்து வந்த நிலையில் சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி சிலைகள் கும்பகோணம் நீதிமன்ற உத்தரவுப்படி கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற ஏகாம்பரநாதர் கோவில் கடந்த 2015-ஆம் ஆண்டு நன்கொடையாக பொதுமக்களிடம் இருந்து பணம் மற்றும் தங்கம் பெறப்பட்டது.அவ்வாறு பெறப்பட்ட பணத்தில் செய்யப்பட்ட சிலைகள் ஆகம் விதிப்படி செய்யப்படவில்லை என்றும், சிலைகள் செய்ய தங்கம் மற்றும் பணம் வசூலிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் குவிந்தது.
புகாரின் அடிப்படையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர் இந்த விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது அதில்
காஞ்சிபுரம் ஏகம்பநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை 111 கிலோ எடையிலும் மற்றும் ஏலவார்குழலி சிலை 65 கிலோ எடையிலும் செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சிலைகளிலும் 8.75 கிலோ கணக்கின் படி தங்கம் சேர்க்கப்பட்டு இருக்கவேண்டும். சிலைகள் செய்ய தங்கத்தை பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெற்று கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும் இந்த சிலைகள் செய்யப்பட்டதில் புகார்கள் எழதொடங்கியது. இது தொடர்பாக எழுந்த புகாரில் 2 சிலைகளிலும் சிறிது அளவுகூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்ற முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை கடந்த ஜனவரி மாதம் இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை விரைந்து தொடங்கியது.இந்த விசாரணை ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை காவல்துறை கண்காணிப்பாளர் ரகுபதி உள்ளிட்ட 4 காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தனிப்படை முழுவிச்சில் விசாரணையை மேற்கொண்டனர்.புகார் வந்த சிலைகளை ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட 2 சிலைகளை மட்டும் சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் சுமார் 2 முறை சோதனை செய்து திரும்ப திரும்ப பார்த்தனர். அந்த சோதனையில் சிலைகளில் சிறிதளவு கூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டது. சிலை செய்ய பயன்படுத்தபட்டதாக 8.75 கிலோ எடை தங்கத்தையும் முறைகேடு மூலம் மோசடி செய்து இருப்பது அம்பலமானது.
தங்கத்தை முறைகேடாக கையாண்ட வழக்கில் அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா உட்பட 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் முக்கியமான பெரும்புள்ளியாக முத்தையா ஸ்தபதியோடு 6 பேர் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர். இந்தநிலையில் அலட்டான அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தங்கம் முறைகேட்டில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தது. தங்கம் முறைகேட்டில் அரசே ஈடுபட்டதுள்ளது.அதன்படி அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா தான் தங்கம் முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர் அதிரடியாக திட்டம்திட்டி அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை கண்காணித்து வந்தது.அப்படி கவனித்து கொண்டிருந்த பொழுது மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு தனது காரில் வந்துகொண்டு இருந்தார். அப்போது அலட்டான தனிப்படை காவல்துறையினர் நடுவழியிலேயே காரை நிறுத்தி, கூடுதல் ஆணையர் அதிரடியாக கவிதாவை (ஆக.01)தேதி கைது செய்தனர். இந்த கைது அன்று பரபரப்பாக பேசபட்டது.
கைது செய்த அவரை சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு பிறகு அவரை கும்பகோணத்தில் சிலை கடத்தல் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.பின்னர் ஜாமீல் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிலைகள் அனைத்தும் காஞ்சிபுரம் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த வியாழக்கிழமை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.இந்த நிலையில் அந்த சிலைகள் அனைத்தும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சிலைமுறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…