சொந்த ஊருக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை உருட்டு கட்டயால் கொலைவெறி தக்கிய திமுக ஒன்றிய பொருளாளர் மீது வழக்கு பதிவு…

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் பகுதியின் திமுக ஒன்றிய பொருளாளர் முனுசாமி தனது செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல மறுத்து தனது கட்சிகாரர்களை வைத்து உருட்டு கட்டையால் அடித்து உதைத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புதுக்குப்பம் பகுதியில் செங்கல் சூளை ஒன்றில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கின் காரணமாக செங்கள் சூளையும் மூடப்பட்டு வேலையில்லாமல் இருந்துள்ளனர். எனவே இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி தங்கள் செங்கல் சூளை முதலாளியான திமுக ஒன்றிய பொருளாளர் முனுசாமியிடம் கூறி உள்ளனர். இதனை தடுத்து நிறுத்திய முனுசாமி மற்றும் திமுக கட்சியினர், அந்த ஒடிசா மாநில தொழிலாளர்களை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் இரு தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கில் வாழ்வதற்கு வழியும் சொல்லாமல், வீட்டிற்கு செல்ல முயன்றவர்களை அடித்து மிரட்டிய கொலை வெறி தாக்குதல் நடத்திய திமுகவினரின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு
அனைவரும் சமுக வலைதளங்களில் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றார். இந்த சம்பவம் திங்கட்கிழமை நடந்து உள்ளது. ஆனால் நேற்று தான் இது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. காயம்பட்டவர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒடிசாவில் உள்ள தங்கள் உறவினருக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அவர்கள் உடனடியாக ஒடிசா அரசை நாடி உள்ளனர். ஒடிசா அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு செங்கல்
சூளை முதலாளியான திமுக ஒன்றிய பொருளாளர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது. காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.