“சொத்து வரி உயர்வுக்கு இதுதான் காரணம்”- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

Published by
Edison

மத்திய அரசின் நிபந்தனை காரணமாகவே வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பல பம்பர் பரிசுகள்:

அந்த வகையில்,தமிழக எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில்,இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என ட்வீட் செய்திருந்தார்.

கடும் கண்டனம்:

இதனைத் தொடர்ந்து,சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்:

திமுக சொன்ன விடியல் இதுவா?:

“தமிழகம் முழுவதும் சொத்து வரியை 100% வரை உயர்த்தியிருக்கிற தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா?,சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

வரி உயர்வுக்கு இதுதான் காரணம்:

இந்நிலையில்,சொத்து வரி உயர்வை மார்ச் 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளவில்லை என்றால் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய சுமார் ரூ.15,000 கோடி நிதியினை வழங்க மாட்டோம் என நிர்பந்தம் கொடுத்ததாக தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார்.

வரி உயர்த்தாவிட்டால் நிதி கிடைக்காது:

குறிப்பாக,வரி உயர்த்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என மத்திய அரசு கூறியதாகவும்,எனவே,மத்திய அரசின் நிபந்தனை காரணமாகவே வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வரி உயர்த்தப்பட்டுள்ளது.மக்களின் தேவையை பூர்த்தி செய்ய சொத்து வரி உயர்வு அவசியம் எனவும்,ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையிலேயே வரி உயர்த்தப்பட்டுள்ளது எனவும் கே.என்.நேரு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

1 minute ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

27 minutes ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

55 minutes ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

1 hour ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

2 hours ago

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

9 hours ago