சேலம் வந்த கீர்த்தி சுரேஷ் ! ஆரவாரத்தில் குமிந்த இளைஞர்கள் கூட்டம்..!
சேலத்தில் நகைக் கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை கீர்த்தி சுரேசைக் காண ரசிகர்கள் திரண்டனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் நகைக் கடை திறப்பு விழாவுக்கு அவர் வந்தார். அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தால், தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேடைக்கு வந்த கீர்த்தி சுரேஷைக் கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
நகைக் கடையை திறந்து வைத்த அவர், நிகழ்ச்சியில் தமது பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகைகளை வெளியிட்டார். தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பேசிய கீர்த்தி சுரேஷ், நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். ரஜினிமுருகன் திரைப்படத்தில் ரசிகர்களை கவர்ந்த காட்சிகளையும் அவர் நடித்துக் காட்டினார்.