சேலம் ரயில் நிலையத்தில் இன்று முதல் இலவச வைஃபை
ரயில் பயணிகள் அதிகமாக செல்லும் மாநகரங்களின் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது, சேலம் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதனால், சேலம் ரயில் நிலையத்தில், 5 நடைமேடைகளிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்த நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. அதன் படி இன்று முதல் சேலம் வைஃபை வசதி செயல்படும் என நிர்வாகம் அறிவித்ததுள்ளது.
source : dinasuvadu.com