சேலம், தர்மபுரி மற்றும் காஞ்சிபுறத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்!
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேலம், சென்னை, எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு அளிப்பது போல், மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புகள் ஊடுருவியுள்ளனர்.
போராட்டத்திற்கு விவசாயிகள் உள்ளிட்டோரை மூளைச்சலவை செய்து துாண்டி வருகின்றன.
துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புகள் ஊடுருவியதால் வன்முறைவெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, போராட்டம் மேற்கொள்ளும் மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புகள், தங்கள் முகாம்களை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைத்துள்ளனர்.
விரைவில் சேலம்,சென்னை எட்டு வழிச்சாலையில் இத்திட்டம் துவங்க உள்ளது. இத்திட்டத்திற்கு அரசு, அரசின் புறம்போக்கு நிலம், விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என ஒரு தரப்பினரும், விவசாய நிலத்தை இத்திட்டத்துக்கு வழங்க மாட்டோம் என மற்றொரு தரப்பினரும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடம் மனு வழங்கி வருகின்றனர்.
விவசாயிகளுக்குஆதரவாக, தற்போது வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சேலத்தில் முகாமிட்டு வன்முறையைதுாண்டும் வகையில் பேசி வருகிறார் என்று கூறுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.