சேலம் – சென்னை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு:கைதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் விடுதலை!
சேலம் – சென்னை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலையிலிருந்து சேலத்துக்கு நடைபயணம் மேற்கொண்ட நிலையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு போலீசார் விடுவித்தனர்.இதைத் தொடர்ந்து மீண்டும் நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் தொடங்கினார்கள்.மேலும் இதனை தொடர்ந்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மத்தியகுழு உறுப்பினர் உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட 120 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிபதியின் முன்னால் ஆஜர் படுத்தப்பட்டனர்.பின்னர் கைதான 120 பேர் மீண்டும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.