சேலம் – கரூர் இடையே மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி……!!
சேலம் – கரூர் இடையே மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சேலத்தில் இருந்து மேலூர், ராசிபுரம், நாமக்கல், மோகனூர் வழியாக கரூருக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 87 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரயில்பாதையை மின் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்ற பணிகள் அண்மையில் நிறைவடைந்ததை தொடர்ந்து, சோதனை முறையாக ரயில் இயக்கப்பட்டது.
சேலம் கோட்ட ரயில்வே தலைமை துணை பொறியாளர் ஜான்சன் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் ரயிலில் பயணித்து ஆய்வு செய்தனர். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக கூறிய அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்விற்கு பிறகு, மின் மயமாக்கப்பட்ட பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தனர்.