தனியார் பள்ளி பங்குதாரர்களிடையே சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் கேட்டு பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
ஏழுமாத்தனூர் கிராமத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 பங்குதாரர்களால் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அதன் பங்குதாரர்களிடையே நீண்ட நாட்களாக கணக்கு, வழக்கு பிரச்சனை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. பள்ளி வளாகத்திலேயே அவ்வப்போது பங்குதாரர்கள் மோதலில் ஈடுவதாகக் கூறும் மாணவர்களின் பெற்றோர், இதனால் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனையடுத்து தங்களது பிள்ளைகளின் மாற்றுச்சான்றிதழை வழங்குமாறு கேட்டு, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி காவல்துறையினர், பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…