மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையாளராக சேலம் அருகே சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரங்கநாயகி பணியாற்றி வருகிறார். இவரது மகன் சசிதரன், மனைவி பிரேமாவுடன் ஓசூரில் தங்கி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். சசிதரன் – பிரேமா தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பிரச்சனை முற்றிய நிலையில், இருவரும் புறப்பட்டு சேலத்திலுள்ள சசிதரனின் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு சசிதரனின் தாய் ரங்கநாயகிக்கும், சசிதரனின் மனைவி பிரேமாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேமாவின் பெற்றோர் வந்து சசிதரனின் வீட்டு முன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ரங்கநாயகி, அவரது கணவர் மோகன், சசிதரன் மூவரும் தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமாகியுள்ளனர்.
முன்னதாக ரங்கநாயகி தனது தங்கையை செல்போனில் அழைத்து மூவரும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தற்கொலை செய்து கொள்ளப்போவதற்கான காரணம் குறித்து சசிதரன் பேசி அனுப்பிய வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. அதில் தன்னையும் தனது பெற்றோரையும் தனது மனைவி பிரேமா அவமானப்படுத்தி விட்டதாகவும் அதனால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூவரும் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியிலுள்ள குலதெய்வம் கோவிலுக்குச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுவதால் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.விபரீத முடிவெடுப்பதற்குள் மூவரையும் மீட்கும் எண்ணத்தில் காவல்துறையினர் மைசூர் உட்பட பல்வேறு இடங்களிலும் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…