நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 4பேரை சேலத்தில் பசுமைவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களை போராட்டத்திற்கு தூண்டி வந்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் – சென்னை இடையே திருவண்ணாமலை மாவட்டம் வழியாகப் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமைவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சாலை அமைக்கப்பட உள்ள பாதையில் விளைநிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்படும் என்பதால் விவசாயிகள் சிலர் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பசுமைவழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடக் கோரி விவசாயிகளும் பொதுமக்களும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் இந்தத் திட்டத்துக்கு ஆய்வுக்குச் சென்ற வருவாய்த்துறையினரைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்துப் பசுமைவழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்துப் பொதுமக்களைப் போராடத் தூண்டுபவர்களைக் கண்காணிக்க உளவுத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாரிமுத்து, நாராயணன், முத்துக்குமார், ரவி ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சேலம் மாநகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் ரவியைக் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திலும், மற்ற மூவரை அம்மாப்பேட்டைக் காவல்நிலையத்திலும் வைத்து விசாரித்தனர்.
இவர்கள் பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிராக மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதையறிந்த பொதுமக்களும் விவசாயிகளும் காவல்நிலையத்துக்குத் திரண்டுசென்று அவர்களை விடுவிக்கக் கோரி முற்றுகையிட்டனர். இதனிடையே விசாரணைக்குப் பின் 4பேரையும் வேறுஇடத்துக்குக் காவல்துறையினர் கொண்டுசென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…