சேலத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!
பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சேலத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் உள்ளிட்டோர், மாநகராட்சி அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எம்.டி.எஸ் நகரில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக, 6 மாதங்களுக்கு முன் சாலையில் பள்ளம் தோண்டப் பட்டது. தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றபோதும், தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல், மோசமான நிலையிலேயே உள்ளன என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் விநியோகமும் முறையாக இல்லாததால், தி.மு.க.வினர் தலைமையில் ஏராளமானோர் சாரதா கல்லூரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த மாநகராட்சி அதிகாரியுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரது சமாதானத்தை ஏற்க மறுத்த அவர்கள், சாலையில் தேங்கியிருந்த சகதியில் நாற்று நடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.