செல்லம்'சுதந்திரத்து'க்கு உடம்பு சரியில்லை..!! குழந்தையை மீட்ட கீதா கண்ணீர்..!!
சுதந்திரதினத்தன்று சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் பிறந்து இரண்டு மணி நேரமான பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை கீதா என்பவர் மீட்டெடுத்ததோடு, சுதந்திரம் என்று பெயரிட்டார்.
வளசரவாக்கத்தில் கால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சுதந்திரம் என்ற பச்சிளம் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்ற தகவல் கிடைத்ததும் கீதா கவலையடைந்துள்ளார். சுதந்திரத்துக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டவுடன் வருத்தமாக இருக்கிறது. அவனுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்துவருகிறேன். அவனைப் பார்க்க இன்று மருத்துவமனைக்குச் செல்கிறேன்” என்று கண்ணீருடன் கூறினார்.
இதனையடுத்து எழும்பூர் மருத்துவர் கூறுகையில் சுதந்திரம், மற்ற குழந்தைகளைப் போல நலமாக இருக்கிறார். அவருக்குச் சில சிகிச்சை அளித்துவருகிறோம். விரைவில் பூரண குணமடைவார். அவரை நர்ஸ்கள், டாக்டர்கள் கவனித்துவருகின்றனர். கால்வாயில் உள்ள அசுத்த தண்ணிரால் அவனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது விரைவில் குணமடைவான் என்று தெரிவித்தனர்.
DINASUVADU