செப்டம்பர் 10 …!முடங்குகிறதா இந்தியா ….!பெருகும் ஆதரவு …!எகிறும் பெட்ரோல் விலை …!
செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகின்றது.
காங்கிரஸ் சார்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
இதனால் செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.
இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.
இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் இப்படி பாரத்பந்த்க்கு தொடர்ந்து ஆதரவு பெருகும் நிலையில் இதற்கு பயப்படுமா மத்திய அரசு என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.இந்த போராட்டம் வெற்றி பெரும் பட்சத்தில் பாஜக-வுக்கு பெருத்த அரசியல் நஷ்டமே ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.