செப்டம்பர் 10 ஆம் தேதி முழு அடைப்பு..!காங்கிரஸ் தலைமையில் போராட்டம்…!அதிமுக பங்கேற்பது குறித்து முடிவு …!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்
செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.
இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.
அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நாளை பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.