வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் பலத்த தரை காற்று வீசும் என்பதால் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையில் அதிகமாக மலை பெய்தது . வங்ககடற்பகுதியில் 60கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த தரை காற்று வீசும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…