சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …! தென் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் …!கனமழைக்கு வாய்ப்பு …!
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென் தமிழக மீனவர்கள் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.