சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலத்தீவு, குமரி கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருகிறது.