சென்னை வழியாக வேலூர்-திருப்பதிக்கு விமான சேவை..!

Default Image

மத்திய விமான போக்குவரத்து துறை உதன் திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான போக்கு வரத்து சேவையை ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி சமீபத்தில் சென்னை – சேலம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. தனியார் விமான நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது.

மேலும் சென்னை- வேலூர், சென்னை-தஞ்சாவூர் இடையே விமான சேவை தொடங்க பணிகள் நடந்து வருகிறது. வேலூரில் உள்ள அப்துல்லாபுரம் என்ற இடத்தில் விமான நிலையம் அமைகிறது.

இதற்கிடையே உதன் திட்டத்தின் கீழ் 2-வது கட்டமாக திருப்பதியில் இருந்து வேலூருக்கு சென்னை வழியாக விமான போக்கு வரத்து சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் வேலூர் விமான நிலையத்தில் 70 இருக்கைகள் கொண்ட விமானம் தரை இறங்கும் வகையிலான ஓடுபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்கள் தரை இறக்கும்படியான ஓடுபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விமான போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னைக்கு அருகே உள்ள வேலூரில் விமான நிலையம் அமைவது மிகவும் வசதியானதாகும். அங்கு விமானங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம். வேலூர் விமான நிலையத்தில் 70 இருக்கைகள் கொண்ட விமானங்களை கையாளும் வகையில் ஓடுபாதை தரம் உயர்த்த வேண்டும் என்றார்.

கடந்த 4 ஆண்டுகளில் வேலூரில் கல்வி நிறுவனங்கள், தொழில் வளர்ச்சி காரணமாக சென்னைக்கு போக்குவரத்து சேவை அதிகரித்து இருக்கிறது.

அதன்படி உதன் திட்டத்தில் வேலூர் – சென்னை இடையே விமான போக்குவரத்து சேவைக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது திருப்பதி செல்லும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி-வேலூர் இடையே விமான சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்