சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை…!

Published by
Venu

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுகவினர் மற்றும் எதிர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சற்று முன் வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது.

இதற்கு முன் , திமுக செயற்குழு தீர்மானம் காவிரிப் பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விவாதிக்கத் நிறைவேற்றியுள்ளது.

உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில் திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரிச் சிக்கலில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்துத் தேசியப் பசுமைத்தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தவும், நேர்மையற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ரத்து செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறித்ததற்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது .காவிரி நீருக்காக டெல்டா மாவட்டத்தில் உரிமை மீட்பு பயணம் நடத்துவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வரும் என்றும் சென்னை வரும் பிரதமர், மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும். வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது . முழு அடைப்பு போராட்டத்துக்கு, அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் திமுக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்டாலின் பேசிய பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,வி.சி.தலைவர் திருமா இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன்,தி.க. கி. வீரமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசர், திருமாவளவன், கி.வீரமணி, முத்தரசன், உதயநிதி ஆகிய ஆனைவரும்  விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Published by
Venu

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

10 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

10 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

10 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

11 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

11 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

12 hours ago