சென்னை மெட்ரோ ரயிலில் 5-வது நாளாக இலவச பயணம்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
மெட்ரோ ரயில் நிர்வாகம்,சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்றும் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு, ஆலந்தூர் வழியாகப் பரங்கிமலைக்கும், டிஎம்எஸ்சில் இருந்து கிண்டி, ஆலந்தூர் வழியாகச் சென்னை விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலுக்குப் பொதுமக்களை ஈர்க்கும்பொருட்டுக் கடந்த 25ஆம் தேதியில் இருந்து இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
முதல்நாளில் 50ஆயிரம் பேர் பயணம் செய்ததாகவும், இரண்டாம் நாளில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் பயணம் செய்ததாகவும், மூன்றாம் நாளான நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 84ஆயிரம் பேர் பயணம் செய்ததாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்றும் ஐந்தாவது நாளாக பொதுமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.