சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான துறைமுகங்களில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
கடலூர் மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடல் தொடர்ந்து சீற்றத்துடனும் பெரிய அலைகளுடனும் காணப்படுவதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாகை, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், தனுஷ் கோடி அரிச்சல் முனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.