சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மாநகரப் பேருந்தை சிறைப் பிடித்து பஸ்டே கொண்டாட்டம்!
மாநகரப் பேருந்தை சிறைப் பிடித்து சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாடிய வீயோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் 21 ஜி பேருந்தை டி.ஜி.பி. அலுவலகம் அருகே சிறைப்பிடித்த மாணவர்கள், அதில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு பேருந்தை ஆக்கிரமித்தனர். பேருந்தின் ஜன்னல் வழியாக ஏறி மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் ஆட்டம்போடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
மாநிலக் கல்லூரி மாணவர்களின் பஸ் டே கொண்டாட்டத்தை இருசக்கர வாகனங்களில் உடன் வந்த சக மாணவர்கள் படபிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.