சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு கி.வீரமணி அஞ்சலி!
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பெசன்ட் நகர் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் அஞ்சலி செலுத்தினார் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.