சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் …!மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை …!உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாது என உறுதியளித்து விட்டு, அரசு முறையற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 109 மரங்களை வெட்டியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்க கூடாது ? தனியார் நிலத்தை உட்பிரிவு செய்து அரசு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
அதேபோல் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்வதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.