சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்று கூறிய முதலமைச்சர், அதனால் ஏற்படும் பயன்களை சட்டப்பேரவையில் விளக்கி எதிர்ப்புகளை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில், சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை திட்டம் மற்றும் திட்டத்திற்கான எதிர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது என அவர் கூறினார். இந்த பசுமை வழிச்சாலை 8 வழிச்சாலையாக, சென்னை அருகிலுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பசுமை வழிச்சாலை திட்டத்தினால் காடுகள் அழிக்கப்படும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதை முதலமைச்சர் மறுத்தார். இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, 2007-2008ஆம் ஆண்டு நிலவரத்தோடு ஒப்பிட்டால் 4 மடங்கு அதிகம் எனவும் முதலமைச்சர் கூறினார். பசுமைவழி விரைவு சாலையினால், டீசல் சேமிப்பு ஓராண்டுக்கு சுமார் 700 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பசுமைவழி விரைவுச் சாலையினால் தமிழ்நாட்டில் தொழில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். பசுமைவழி விரைவுச் சாலையினால், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்று கூறிய முதலமைச்சர், எதிர்ப்புகளை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். சேலத்தில் தாம் இருப்பதினால், தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…