சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை : எதிர்ப்புகளை கைவிட வேண்டும் : முதலமைச்சர்..!

Default Image

சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்று கூறிய முதலமைச்சர், அதனால் ஏற்படும் பயன்களை சட்டப்பேரவையில் விளக்கி எதிர்ப்புகளை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில், சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை திட்டம் மற்றும் திட்டத்திற்கான எதிர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது என அவர் கூறினார். இந்த பசுமை வழிச்சாலை 8 வழிச்சாலையாக, சென்னை அருகிலுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

பசுமை வழிச்சாலை திட்டத்தினால் காடுகள் அழிக்கப்படும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதை முதலமைச்சர் மறுத்தார். இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, 2007-2008ஆம் ஆண்டு நிலவரத்தோடு ஒப்பிட்டால் 4 மடங்கு அதிகம் எனவும் முதலமைச்சர் கூறினார். பசுமைவழி விரைவு சாலையினால், டீசல் சேமிப்பு ஓராண்டுக்கு சுமார் 700 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பசுமைவழி விரைவுச் சாலையினால் தமிழ்நாட்டில் தொழில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். பசுமைவழி விரைவுச் சாலையினால், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்று கூறிய முதலமைச்சர், எதிர்ப்புகளை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். சேலத்தில் தாம் இருப்பதினால், தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்