சென்னை-சேலம் பசுமைவழிச்சாலை : வதந்திகளை நம்ப வேண்டாம். : ஆட்சியர் ரோகிணி..!
சென்னை-சேலம் இடையிலான பசுமைவழிச்சாலை திட்டம் குறித்து, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை, பொதுமக்களும், விவசாயிகளும் நம்ப வேண்டாம் என சேலம் ஆட்சியர் ரோகிணி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பசுமைவழிச்சாலையை பற்றி சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
பசுமைவழிச்சாலை திட்டம் பொதுமக்களுக்கான திட்டம்; அவர்களுக்கு பயன்தரும் திட்டம்
நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு அதற்கான உரிய இழப்பீடு நிலம் வழங்குவோருக்கு வழங்கப்படும்
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள்
நிலத்திற்கு மட்டுமின்றி, அதிலுள்ள மரங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றிற்கும் இழப்பீடு
பசுமைவழிச்சாலைக்கான நில அளவீடு பணிகளுக்கு விவசாயிகள் மகிழ்ச்சியாக ஒத்துழைப்பு
அரசு வழங்கும் இழப்பீடு பற்றி பொதுமக்கள், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
நிலம் வழங்குவோருக்கு சிறு பாதிப்பின்றி அதிகபட்ச இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவு
அரசின் அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகளும் நிலம் வழங்குவோருக்கு கிடைக்க ஏற்பாடு
பசுமை வீடு, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை
இளைஞர்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன்கள் கிடைக்க ஏற்பாடு