சென்னை உள்ள மசூதிகளில் சிறப்புத் தொழுகை!
மசூதியில் ரமலான் மாத நோன்பு முடித்துக் கொண்ட பின் சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள இஸ்லாமிய மக்கள் ரமலான் பண்டிகைக்கான சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனர்.
சென்னையின் பெரும்பாலான மசூதிகளில் காலை 7 மணி முதல் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்று வருகிறது. கை, கால்களைத் தூய்மைப் படுத்திக் கொண்டு மசூதிக்குள் சென்று, ரமலான் சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர். உலகில் அன்பு பெருகவும், அமைதி நிலைக்கவும் தொழுகை நடத்திய அவர்கள், பின் ஒருவருக்கு ஒருவர் சகோதரத்துவத்துடன் அணைத்துக் கொண்டு ரமலான் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர்.
ஏழைகளுக்கும், பசியால் வாடுபவர்களுக்கும் உணவு, உடை உள்ளிட்டவை வழங்கி ஈகைப் பண்போடு ரமலான் கொண்டாடி வருகின்றனர். பிற விமான நிலையங்களில் உள்ளது போல், சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் ஹவுசை அரசு அமைத்துத் தந்தால் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.