சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது..!
சென்னை உயர் நீதிமன்றம் , நீதித்துறையை சேர்ந்தவர்களே நீதிபதிகளை விமர்சிப்பதை தடுக்காவிட்டால் நீதித்துறையின் தற்கொலைக்கு வழிவகுக்கும் என வேதனை தெரிவித்துள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகளை விமர்சித்து தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டியளித்ததாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கோரியும் வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் என்பவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக நீதிபதி கிருபாகரனிடம் முறையீடு செய்த அவர், விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கக் கோரினார். தங்கத்தமிழ் செல்வனின் பேட்டி, தொலைக்காட்சி விவாதம், நேர்காணல் சிடி ஆதாரங்களையும் அவர் வழங்கினார்.
அப்போது தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் நீதித்துறை சார்ந்தவர்களே, தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் விமர்சிப்பதை தடுக்காவிட்டால் அது நீதித் துறையின் தற்கொலைக்கு வழிவகுத்துவிடும என்று தெரிவித்த நீதிபதி, விவகாரத்தை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.